உலக கோப்பை தொடர் முடிந்ததில் இருந்து தோனியின் ஓய்வு குறித்து தான் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தோனி ஓய்வு குறித்து இன்று வரை குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை என்றும் இரண்டு மாதம் தற்காலிக ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும் தோனி அறிவித்திருந்தார். இந்நிலையில் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் பானர்ஜி தோனி ஓய்வு குறித்தும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :
தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் இருக்கிறது அது எனக்கு தெரியும். சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தோனி இன்னும் உடற்தகுதியுடன் தான் இருக்கிறார். தோனியால் இன்னும் சிறப்பாக ஆட முடியும். அணித் தேர்வாளர்கள் தோனியிடம் ஓய்வு குறித்த அறிவிப்பினை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். ஆனால் தோனியை அழைத்து அவர்கள் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்து தோனி நன்றாகத்தான் இருக்கிறார். தோனி ஓய்வு குறித்து அவரின் நண்பர்களுக்குக் கூட தெரியாத போது நான் எப்படி அறிந்து வைத்திருக்க முடியும். ஆனால் தோனியால் நிச்சயம் இன்னும் ஓரிரு ஆண்டுகள் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். அதனால் தோனியின் தனிப்பட்ட முடிவை பிசிசிஐ நேரில் அழைத்து அவரிடமே கேட்டு கொள்ளலாம் என்று கேசவ் பேனர்ஜி கூறினார்.



