2 வருஷத்துக்கு முன்னாடி எப்படி பாத்தேனோ அப்படியே இருக்காரு. தோனியிடம் இந்த ஒரு விடயம் மட்டும் மாறவே இல்ல – பாலாஜி நெகிழ்ச்சி

Balaji-3
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்ட எவ்வாறெல்லாம் பயிற்சி செய்தார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் துவங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் கொரோனா வைரசின் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Balaji 2

- Advertisement -

ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக ஆடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கலாம் என்ற கனவோடு இருந்தார் தோனி. இதற்காக தன்னை பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கிய உடனே பயிற்சி செய்யத் தொடங்கினார். வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே தனது பயிற்சியைத் தொடங்கினார்.

தற்போது 38 வயதான தோனியின் எதிர்கால கிரிக்கெட் பயணம் இந்த ஐபிஎல் தொடரில் தான் இருக்கிறது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி தெரிவித்ததாவது :

Dhoni

உடல்தகுதிவிஷயத்தில் எப்போதும் கராறாக இருப்பார் தோனி. வழக்கம்போல் தனது உடல் தகுதியை மேம்படுத்தி வைத்திருந்தார். எப்போதும் போல பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி பயிற்சி செய்தாரோ அதே இளமையுடனும் அதே வேகத்துடனும் பயிற்சி செய்தார்.

- Advertisement -

வேறு எந்த பெரிதான சிறப்பான மாற்றத்தையும் செய்யவில்லை. அவரின் வழக்கமான இளமையான மனநிலை எப்படி இருந்ததோ அப்படித்தான் இருந்தது என்று கூறியுள்ளார் பாலாஜி. தோனியின் துடிப்பும் வேகமும் இன்னும் குறையவில்லை, அதனை இரண்டு ஆண்டுகள் கழித்தும் இன்றும் பார்க்கிறேன்.

Dhoni

தோனி இந்த ஐ.பி.எல் தொடர் மூலம் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஐ.பி.எல் தொடர் ரத்து செய்யப்பட இருப்பதால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement