தோனி ஓய்வு எப்போது என்பது பற்றி பாலாஜி ஹாசன் கணித்து கூறியது என்ன தெரியுமா ?

Balaji
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் எந்த அணி விளையாடும், அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணி முன்னேறும் மற்றும் இறுதிப் போட்டியில் தொடர் நாயகன் விருதை யார் பெறுவார் என்பது போன்ற பல தகவல்களை சரியாக கணித்துக் கூறியவர் பாலாஜி ஹாசன்.

Eng-1

- Advertisement -

அவரின் கணிப்பு படியே இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. ஆனால் அதில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோதிடம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் தோனியின் ஓய்வு குறித்து தற்போது ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதன்படி பாலாஜி ஹாசன் கூறியதாவது : தோனி இப்போதைக்கு ஓய்வு பெறும் வாய்ப்பை இல்லை. தோனியின் ஜாதகப்படி லக்னாதிபதி தனுசு இருப்பார். அந்த தனுசு ராசி இருக்கும் வரை அவரை ஒன்றும் செய்ய முடியாது. அக்டோபரில் குரு பெயர்ச்சி ஆகிறார்.

Dhoni-1

ஆகையால் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாதம் ஓய்வினை அறிவிப்பார். அப்படி இல்லை என்றால் 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் தான் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பார். இன்றோ நாளையோ திடீரென்று ஓய்வினை அறிவிக்க வாய்ப்பே இல்லை என்று பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement