ஜடேஜாவுக்கு கேப்டன்சி பொறுப்பு தந்ததே அவருக்கு ஒரு பெரிய பாரம் தான் – பத்ரிநாத் ஓபன்டாக்

Badrinath
- Advertisement -

இந்தியாவில் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 26-ம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் மொத்தம் 70 போட்டிகளில் மோத உள்ளதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஐபிஎல் தொடரானது ரசிகர்களை பெரிய அளவில் மகிழ்விக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த தொடருக்கான சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென நேற்று தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

Dhoni

- Advertisement -

அதனை தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக தோனி இப்படி ஒரு முடிவை அறிவிக்க தற்போது இந்த விடயம் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா மிகச்சிறந்த வீரர் என்பதனாலும் அணியின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரம் என்பதனாலும் அவருக்கு இந்த கேப்டன் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.

ஒருபுறம் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது வருத்தத்தை அளித்தாலும் மறுபுறம் ஜடேஜா கேப்டன்சி செய்ய இருப்பது குறித்து பல்வேறு கருத்துகள் பொதுவெளியில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட இருப்பது குறித்து தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Jadeja

கடந்த இரண்டு சீசன்களில் ஜடேஜா மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவர் எப்போதுமே ஒரு பவுலராக சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் கடந்த சில ஆடுகளாக பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் அணியின் முக்கிய ஃபீல்டராகவும் அவர் திகழ்கிறார். இப்படி மூன்று விதத்திலும் அசத்தும் அவர் 3D பிளேயராக இருந்தார். மேலும் தற்போது ஜடேஜாவுக்கு கேப்டன்சி பதவியும் சேர்ந்து அவர் ஒரு 4D கிரிக்கெட் வீரராக மாறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அவருக்கு கேப்டன்சி பொறுப்பு என்பது மிகப் பெரிய பாரம்தான் என்று நான் கூறுவேன். ஏனெனில் ஏற்கனவே அவர் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே எந்த ஒரு அணியையும் வழி நடத்திய அனுபவம் கிடையாது. அது மட்டுமின்றி அணியில் அவருக்கு என்று தனி பொறுப்புகள் இருக்கின்றன. அதாவது பௌலிங் செய்யும்போது முக்கியமான ஓவர்களை வீசுவது, பேட்டிங்கின்போது பின்வரிசையில் ரன்களை விரைவாக குவிப்பது அதுமட்டுமின்றி பீல்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 முதல் போட்டி : சென்னை – கொல்கத்தா, வெல்லப்போவது யார்? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

இப்படி மூன்று விதமான வேலைகளை செய்யும் அவர் தற்போது கூடுதலாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளது நிச்சயம் அவருக்கு கூடுதல் பாரத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார். இருப்பினும் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெறும் வரை ஜடேஜாவிற்கு எந்த அளவிற்கு ஆலோசனைகளை வழங்க முடியுமோ அந்த வகையில் அறிவுரைகளை கொடுத்து நல்ல தலைமைப் பண்புடைய கேப்டனாக மாற்றிய பின்னரே அவர் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement