சுப்மன் கில் இடத்தில் நம்ம தமிழக பசங்க இருந்திருந்தா இதுதான் நடந்திருக்கும் – சுப்ரமணியம் பத்ரிநாத்

Badri
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. அதோடு சேர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. அதே வேளையில் ஆஸ்திரேலிய அணி கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்று அவர்களது தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தமிழக வீரராக இருந்தால் தூக்கி இருப்பாங்க :

இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இந்திய பேட்ஸ்மேன்களின் மெத்தனமான ஆட்டம் தான். பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் பேட்டிங்கை பொறுத்த வரை டாப் ஆர்டரில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரியளவில் கை கொடுக்கவில்லை.

- Advertisement -

இதன் காரணமாகவே இந்தியா வெற்றி பெற வேண்டிய சூழலிலும் தோல்வியை சந்தித்திருந்தது. இந்நிலையில் பேட்ஸ்மேன்களின் இந்த மோசமான செயல்பாடு இந்திய அணியை பெரிய அளவில் பாதித்துள்ளதாகவும் அதிலும் குறிப்பாக சுப்மன் கில் விளையாடிய இடத்தில் தமிழக வீரர்கள் யாராவது விளையாடி இருந்தால் அவர்களுக்கு இவ்வளவு வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் காட்டமான சில கருத்துக்களை தமிழக முன்னாள் வீரரான சுப்பிரமணியன் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரராக இருந்திருந்தால் எப்போதோ அணியிலிருந்து வெளியேற்றி இருப்பார்கள். அவர் பேட்ஸ்மனாக எந்த உதவியும் செய்ததாக எனக்கு தெரியவில்லை.

- Advertisement -

நீங்கள் பெரிய ரன்களை அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை குறைந்தபட்சம் அதிக நேரம் களத்தில் நின்று நிறைய பந்துகளை சந்திக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பௌலர்களை சோர்வாக்க முடியும். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கில் இந்த தொடரில் எதுவுமே செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : பழைய மாதிரி திரும்பி வரனும்னா இதை பண்ணுங்க போதும்.. கோலிக்கு அறிவுரை கூறிய ஏ.பி.டி – விவரம் இதோ

அது மட்டும் இல்லாமல் ஒரு ஃபீல்டராகவும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஸ்லிப்பிலோ, பாய்ண்டிலே நின்று அவரால் கேட்ச்களை பிடிக்க முடியவில்லை. அவர் இந்திய அணிக்கு எந்த வகையில் உதவுகிறார் என்பதும் எனக்கு தெரியவில்லை என சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement