- Advertisement -
ஐ.பி.எல்

ரிஷப் பண்டை லக்னோ அணி வெளியேற்றினால் இதுதான் நடக்கும் – சுப்ரமணியம் பத்ரிநாத் கருத்து

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறியது. திறமை வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் நிறைந்து இருந்தாலும் லக்னோ அணியின் இந்த மோசமான செயல்பாடு நிர்வாகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷப் பண்டை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டாது : பத்ரிநாத்

கடந்த சில ஆண்டுகளாகவே லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் தலைமையின் கீழ் அந்த அணி இதுவரை சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. மேலும் 27 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏளத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்டின் பேட்டிங்கும் சரி, கேப்டன்சியும் சரி சோபிக்கவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் லக்னோ அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அப்படி அவர் நீக்கப்பட்டால் எந்த அணியும் அவரை வாங்க முயற்சிக்காது என்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறார். எனவே அவர்கள் ரிஷப் பண்டை விடுவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று அவர் ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் நிச்சயம் மற்ற அணிகள் அதிக விலைக்கு அவரை வாங்குமா? என்று கேட்டால் அது சந்தேகம்தான்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவதில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் – அருண் துமால் ஓபன்டாக்

மேலும் ரிஷப் பண்டுடன் சேர்த்து நிக்கோலஸ் பூரான், மாயங்க் யாதவ் ஆகியோரையும் லக்னோ அணி வெளியேற்றினால் அவர்களுக்கு 60 கோடி ரூபாய் கிடைக்கும் என்பதனால் அந்த மூவரையும் வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை வாங்குவதே சரியான வழியாக இருக்கும் என்றும் பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -