இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி இந்த டி20 தொடரை கைப்பற்றி அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது கடந்த ஓராண்டாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது.
இந்திய அணியின் 3 மேட்ச் வின்னர்கள் : பத்ரிநாத் தேர்வு
இவ்வேளையில் இந்த ஆஸ்திரேலியா தொடரிலும் இந்திய அணி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தும் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் இந்திய வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் இந்த டி20 தொடரில் இந்திய அணி சார்பாக மேட்ச் வின்னராக இருக்கப்போகும் மூன்று வீரர்கள் குறித்த தனது பதிலை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் முதலில் தேர்வு செய்தது அபிஷேக் சர்மாவை தான். இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான அவர் ஆசிய கோப்பை தொடரின் போது 7 ஆட்டங்களில் விளையாடி 44 ரன்கள் சராசரி உடனும், 200 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 314 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.
அதேபோன்று அவர் அடுத்ததாக தேர்வு செய்தது சூரியகுமார் யாதவ் : கடந்த ஓராண்டாகவே சற்று மோசமான பேட்டிங் ஃபார்மில் காணப்படும் சூரியகுமார் யாதவ் இன்னும் பழைய இயல்பான ஆட்டத்திற்கு திரும்பாமல் தவித்து வருகிறார். குறிப்பாக கடைசியாக அவர் விளையாடிய 30 டி20 போட்டிகளில் நான்கு அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு அவரது பேட்டிங் ஃபார்ம் சரிவை சந்தித்துள்ளது. ஆனாலும் அவர் இந்த தொடரில் அசத்துவார் என்று பத்ரிநாத் நம்பிக்கை வைத்து தேர்வு செய்துள்ளார். மூன்றாவது தமிழக வருண் சக்கரவர்த்தி : கடந்த ஆண்டு இந்திய அணிக்காக மீண்டும் கம்பேக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தற்போது டி20 தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங்கின் இந்திய ஜெர்ஸியை.. ஸ்டுவர்ட் ப்ராட் குப்பை தொட்டியில் வீசிட்டாரு.. அப்பா ப்ராட் பேட்டி
கடைசியாக அவர் விளையாடிய 18 போட்டிகளில் இரண்டு 5 விக்கெட்டுகளுடன் சேர்த்து 38 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த ஆஸ்திரேலிய தொடரில் அசத்தப்போகும் வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை சுப்பிரமணியம் பத்ரிநாத் தேர்வு செய்துள்ளது குறிப்பிட த்தக்கது.



