பைனலில் கோப்பை வென்று பாபர் அசாம் பிரதமராக போறாரு – இப்போதே வாழ்த்தும் 2 முன்னாள் வீரர்கள்

babar azam
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறிய இந்த தொடரில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே பரம எதிரி இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தது. அதனால் கதை முடிந்ததாக கருதப்பட்ட அந்த அணி கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாபிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரை இறுதிக்குள் நுழைந்து ஆச்சரியப்படுத்தியது.

Babar Azam Moahmmed Rizwan Pak vs NZ

- Advertisement -

அதோடு நிற்காமல் செமி பைனலில் வலுவான நியூசிலாந்தை அசால்டாக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த 1992ஆம் இதே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இதே போல் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தாலும் அதற்காக துவளாமல் கடைசி நேரத்தில் கிடைத்த அதிர்ஷ்டத்துடன் அரை இறுதிக்கு தகுதி பெற்ற இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் இறுதியில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

தற்போது அதே போல் அதிர்ஷ்டத்துடன் கொதித்தெழுந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் இம்ரான் கான் தலைமையில் நிகழ்த்திய மேஜிக்கை இம்முறை பாபர் அசாம் தலையில் நிகழ்த்தும் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கேற்றார் போல் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் வலுவான இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஃபைனலுக்கு தகுதி பெற்றதால் அவர்களது நம்பிக்கை 100% அதிகரித்துள்ளது.

SUnil Gavaskar Babar Azam

பாபர் பிரதமர்:

ஏனெனில் 1992இல் இதே போலவே அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்த பாகிஸ்தான் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த கோப்பையை வென்றது. அதேபோல் தற்போது நியூசிலாந்தை தோற்கடித்துள்ள பாகிஸ்தான் நவம்பர் 13ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டவர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு முதல் உலகக் கோப்பையை வென்ற இம்ரான் கான் நாளடைவில் பிரதமராக உயர்ந்தது போலவே இந்த உலகக் கோப்பையை பாபர் அசாம் வென்று வரும் காலங்களில் அந்நாட்டின் பிரதமராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கலகலப்பாக கூறியுள்ளார். இது பற்றி இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையை வெல்லும் பட்சத்தில் 2048ஆம் ஆண்டு பாபர் அசாம் அந்நாட்டின் பிரதமராக இருப்பார்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார்.

Vaughan

அதே போல் மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் பாபர் அசாம் பிரதமராக வருவார் என்று இப்போதே கணித்து பேசியது பின்வருமாறு. “1992 உலகக் கோப்பையின் ஃபைனலின் மறு போட்டி 30 வருடங்கள் கழித்து இப்போது நடைபெறுவதை நினைத்தால் அபாரமாக உள்ளது. இது வேறு வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் உணர்வு ஒன்று தான். அதிலும் பாகிஸ்தானுக்கு வெற்றி உணர்வு அதிகமாக உள்ளது. ஒருவேளை பாபர் அசாம் கோப்பையை வென்றால் வருங்காலத்தில் அவர் பாகிஸ்தானின் பிரதமராக வருவார் என்பதை யார் அறிவார்”

“இந்த தொடரில் கோப்பையை வெல்வது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அவருக்கு தனக்கென்று தனி மரியாதையை உருவாக்குவதற்கு சமமாகும். அது நடந்தால் அவருக்கு மிகப்பெரிய நிகழ்வாகும்” என்று கூறினார். முன்னதாக 1992இல் உலகக் கோப்பையை வென்ற இம்ரான் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களிடம் மிகப்பெரிய மதிப்பையும் மரியாதையும் பெற்றதால் ஓய்வுக்குப்பின் 1996இல் கட்சி துவங்கி 22 வருடங்கள் கழித்து 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement