- Advertisement -
உலக கிரிக்கெட்

இப்படி ஒருத்தர மட்டும் குற்றம் சொல்வது தவறு.. இப்படியெல்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ் – பாபர் அசாம் கடுப்பு

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் இதுவரை மூன்று டி20 உலககோப்பை, இரண்டு ஆசிய கோப்பை, ஒரு 50 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி இருக்கிறார்.

ஆனால் இந்த தொடர்களில் எல்லாம் ஒரு தொடரில் கூட அவரால் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக நடப்பு டி20 உலககோப்பை தொடரில் குரூப் சுற்றோடு அந்த அணி வெளியேறியது பலரது மத்தியிலும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
அதோடு பாபர் அசம் கேப்டன்சி-யையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அயர்லாந்து அணிக்கெதிரான போட்டிக்கு பின்னர் பேசிய அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் : 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததோடு அதனை வெளிப்படையாக அறிவித்திருந்தேன்.

ஆனால் கேப்டன் பதவி மீண்டும் என்னை தேடி வந்தது. எங்களது கிரிக்கெட் வாரியம் என் மீது நம்பிக்கை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியே அந்த பதவியை மீண்டும் எனக்கு வழங்கியிருந்தனர். அதேபோன்று மீண்டும் நான் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினால் அதனை வெளிப்படையாக அறிவிப்பேன்.

- Advertisement -

இப்போது வரை நான் கேப்டன்சியிலிருந்து விலகுவது குறித்து சிந்திக்கவே இல்லை. எப்போதுமே ஒரு அணி தோற்கும் போதும் வெற்றி பெறும் போதும் அணியாக தான் விளையாடுகிறோம். ஆனால் தோல்வி பெறும்போது மட்டும் கேப்டனை கை காட்டுகிறீர்கள். ஒவ்வொரு வீரருக்கு பதிலாகவும் நான் விளையாட முடியாது.

இதையும் படிங்க : அவசரப்பட்டு அவரை ஆட வைத்தால் இந்திய அணி காலியாயிடும்.. முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து

அணியில் உள்ள 11 பேரும் ஒன்றாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும். எனவே அணி தோற்கும் போது கேப்டன் ஒருவரை மட்டுமே கைகாட்டுவது தவறு என கடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -