- Advertisement -
உலக கிரிக்கெட்

3 ஓவரில் ஈஸியா சேசிங் செய்ய வேண்டிய டார்கெட்.. வெற்றி மாறியிருக்கும்.. ஆனா ஏன் செய்யல.. பாபர் விளக்கம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் துவங்கும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்த நிலையில் மே 25ஆம் தேதி பர்மிங்காம் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 183/7 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84, வில் ஜேக்ஸ் 37 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் முகமத் ரிஸ்வான் 0, சாய்ம் ஆயுப் 2 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

பாபர் அசாம் விளக்கம்:
அதே போல அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் 32, பக்கார் ஜமான் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். ஆனால் அடுத்ததாக வந்த சடாப் கான் 3, அசாம் கான் 11, இப்திகார் அகமது 23, இமாத் வசிம் 22 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் கொடுக்க தவறினர். அதனால் 19.2 ஓவரில் பாகிஸ்தானை 160 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதன் காரணமாக 1 – 0* (4) என்ற கணக்கில் இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் இலக்கு அவ்வளவு பெரியதாக இல்லை என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இருப்பினும் தோல்வியை சந்தித்ததற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது சராசரியான இலக்கு. எங்களுடைய பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். பேட்டிங்கில் சில வேகத்தை கொண்டிருந்தோம். ஆனால் நன்றாக ஃபினிஷிங் செய்யவில்லை”

- Advertisement -

“நானும் பஃகாரும் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஆனால் அதன் பின் பெரிய பார்ட்னர்ஷிப் அமையவில்லை. ஒருவேளை அவர்களில் யாராவது 40 – 50 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி வித்தியாசமாக இருந்திருக்கும். எங்கள் வீரர்களில் ஒவ்வொருவருக்கான வேலையையும் ஏற்கனவே முடிவு செய்து விட்டோம். அதனால் ஃபார்மில் இல்லை என்றால் கூட எங்களிடம் வளைவுத்தன்மை இருக்கிறது”

இதையும் படிங்க: இந்திய ஜெர்ஸியை போட்டதும் அவர் நாட்டுக்காக எப்படி மேஜிக் பண்றாருன்னு.. பார்திவ் படேல் உறுதி

“ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பஃக்கார் அதிரடியாக விளையாடினார். ஒருவேளை நானும் அவரும் இன்னும் 3 ஓவர்கள் விளையாடியிருந்தால் வெற்றி வித்தியாசமாக இருந்திருக்கும். இமாத் வாசிம் அனுபவத்தை கொண்டவர். சூழ்நிலைகளையும் எதிரணி பேட்ஸ்மேன்களையும் எப்படி படிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் பேட்டிங்கில் முன்னேறியுள்ளது எங்களுக்கு நல்லது. சடாப் கான் 3 துறைகளிலும் அசத்தக்கூடியவர். அவர் எங்களுடைய உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளது தன்னம்பிக்கையை கொடுக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -