இந்திய ரசிகர்கள் அப்படி செய்வாங்கன்னு எதிர்பாக்கல.. கோலியின் உதவியை வெளிய சொல்ல முடியாது.. பாபர் நெகிழ்ச்சி

- Advertisement -

பாகிஸ்தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் நாக் அவுட் சுற்றை தொடாமல் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதற்கு பொறுப்பேற்று பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து பிஎஸ்எல் கோப்பையை வென்ற அனுபவமிகுந்த நட்சத்திர வீரர் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவருடைய தலைமையில் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. அதனால் உடனடியாக நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்திய ரசிகர்களின் அன்பு:
எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் மீண்டும் பாபர் அசாம் பாகிஸ்தானின் கேப்டனாக செயல்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக சென்ற போது இந்திய ரசிகர்கள் தங்களுக்கு மிகப்பெரிய அன்பையும் ஆதரவையும் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என பாபர் அசாம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விராட் கோலியுடன் பேசும் போதெல்லாம் தன்னுடைய முக்கியமான கேள்விகளுக்கு விலைமதிப்பற்ற ஆலோசனைகளை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அதை வெளியே சொல்ல முடியாது என்று தெரிவிக்கும் பாபர் அசாம் இது பற்றி ஜால்வி டிவியில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஒவ்வொரு முறையும் எதிராக விளையாடும் போது எப்போதும் விராட் கோலியுடன் நான் பேச முயற்சிப்பேன். அப்போதெல்லாம் அவரிடம் நான் சில கேள்விகளை கேட்பேன்”

- Advertisement -

“அதற்கு அவர் பதில் கொடுத்து எனக்கு உதவி செய்துள்ளார். அவருடன் மட்டுமின்றி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நாங்கள் விளையாடும் போது ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோருடன் நான் பேசுவேன். விராட் கோலியுடன் நான் நல்ல முறையாக பேசினேன். நாங்கள் பேசிய சில அம்சங்களை பற்றி என்னால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் அது மிகவும் இனிப்பானது. இந்தியாவில் விளையாடியது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது”

இதையும் படிங்க: தோனி பேட்டிங்கில் செய்வதை நான் பந்துவீச்சில் செய்ய விரும்புகிறேன் – லக்னோ வீரர் யாஷ் தாகூர் விருப்பம்

“அங்கே மைதானம் முழுவதும் நீளமாக இருந்தது. இந்தியாவில் விளையாடும் நீங்கள் அதைத்தான் எதிர்பார்க்க முடியும். அதே சமயம் மற்ற மைதானங்களில் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இந்தியாவிடம் இருந்து அதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. அதுவே இந்தியாவில் என்னுடைய முதல் பயணமாகும். வித்தியாசமான அனுபவமாகும். அது அவர்களின் அன்பாகும். இந்திய மக்கள் எங்களுக்கு நிறைய அன்பை கொடுத்து எங்களுடைய கிரிக்கெட்டை பாராட்டினார்கள்” என்று கூறினார்

Advertisement