கிரிக்கெட் போட்டிகள் பற்றி இன்னும் இத்தனை காலத்திற்கு யோசிக்கக்கூடாது: முன்னாள் கேப்டன் அசாருதீன் அட்வைஸ்

Azhar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான அசாருதீன் எதிர்காலத்தில் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்ட செய்யப்பட வேண்டிய பல மாற்றங்களை பற்றி தெரிவித்துள்ளார். தற்போது உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அதன் தாக்கம் நிச்சயம் கிரிக்கெட்டிலும் இருக்கும் என்று கருதும் அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கிரிக்கெட் போட்டிகள் பற்றி பெரிதாக யோசிக்க கூடாது. அப்படி கிரிக்கெட் போட்டிகள் வேண்டுமானால் அந்த அட்டவணைகளை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் மேலும் கூறுகையில்..

azharuddin

- Advertisement -

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில தொடர்கள் ரத்து செய்யப்பட்டுவிடும் என்றே தெரிகிறது. இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் இப்படி செய்வதை தவிர வேறு வழியே இல்லை.

தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போட்டிகளைப் பற்றி யோசிக்கக் கூடாது. ஆனால் அட்டவணை அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். இதை மிகவும் அவசியம். இல்லை என்றால் கிரிக்கெட் போட்டிகள் பற்றி யோசிக்கவே கூடாது ஐபிஎல் தொடர் பல தரப்பினருக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

azharuddin

வீரர்கள், பயிற்சியாளர்கள், விளம்பரதாரர்கள், ஸ்பான்சர்கள் என அனைவருக்கும் இதில் நல்ல வருமானம் கிடைக்கிறது. இதனால் இந்த தொடரை நடத்த வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். மேலும் பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கிறது.
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நிச்சயம் நடக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்கு ஏற்ப அட்டவணையை தயாரித்து விட்டால் போதும். அதே போல் ஐசிசி உலக கோப்பை தொடரும் மிகவும் முக்கியமானது.

- Advertisement -

வீட்டுக்குள் முடங்கி இருக்கும் இந்த நாட்களில் வீரர்கள் தங்களது உடலை கண்டிப்பாக பராமரிக்கவேண்டும். மனதினை விட்டு விடக்கூடாது, உடல் தகுதியை பராமரிக்க தேவையான பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும். இயல்புநிலை திரும்பியவுடன் ஒரு சில வாரங்களில் விளையாடத் தொடங்கி விடலாம் என்று கூறியுள்ளார் முகமது அசாருதீன்.

azharuddin

ஐபிஎல் போட்டிகள் நடக்குமா நடக்காத என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அசாருதீன் கூறிய கருத்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்றே சொல்லவேண்டும்.

Advertisement