ஐ.பி.எல் அணிகளில் நம்ம ஆளுங்களுக்கு இந்த வாய்ப்பையெல்லாம் எல்லாம் கொடுங்க – அசாருதீன் காட்டம்

Azharuddin

ஐபிஎல் அணிகள் பொதுவாக நன்றாக விளையாடும் வீரர்கள் உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் திறமை இருக்கும் சில வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்று எப்போதும் விமர்சனம் இருந்துகொண்டே இருக்கிறது.

ipl

இந்நிலையில் இந்திய நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கு ஐபிஎல் அணிகளில் வாய்ப்புகள் அதிகம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முகமது அசாருதீன் அவர் கூறுகையில்…
ஐபிஎல் அணிகள் அனைத்தும் கட்டாயம் இந்திய முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு இந்தியாவில் அணிகளின் வழி நடத்த போதுமான அனுபவம் இருக்கிறது. அனைத்து அணிகளும் இந்திய முன்னாள் வீரர்கள் பயிற்சியாளராக இடம்பெற வேண்டும். நம்முடைய பயிற்சியாளர்கள் ஆஸ்திரேலிய பிக்பாஷ் அல்லது இங்கிலாந்து உள்ளூரில் நடக்கும் டி20 தொடருக்கு பயிற்சியாளராக முடியாது.

ஆனால் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் பயிற்சியாளர் ஆகலாம். அப்படி நல்ல திறமையுடன் இருக்கும் முன்னாள் இந்திய வீரர்களை கட்டாயம் ஐபிஎல் அணிகள் பயிற்சியாளராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் முகமது அசாருதீன்.

- Advertisement -

IND-3

பல்வேறு தடைகளுக்கு பின்னர் 13 ஆவது ஐ.பி.எல் சீசன் 4 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத்தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.