நான் கூறுகின்றபடி நீங்கள் ஆடினால் உங்களை யாரும் ஓய்வுபெற வற்புறுத்தமாட்டார்கள் – தோனிக்கு அறிவுரை வழங்கிய அசாருதீன்

azharuddin

உலகக் கோப்பை தொடருக்குப் பின் தோனியின் ஓய்வு குறித்த விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகினார். ஆனால் தோனி தனது ஓய்வு குறித்து எந்த முடிவினையும் இதுவரை அறிவிக்கவில்லை.

dhoni

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் தோனி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியதாவது : ஒரு வீரர் விளையாட விரும்பினால் அவர் எவ்வளவு நாள் விளையாடுவார், எப்படி விளையாடுவர், என்ன நடக்கும் என்பதை தேர்வுக்குழுதான் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். பெரிய வீரர்களை பொருத்தவரை அவர்களும் தன்னம்பிக்கையுடன் பேச வேண்டும்.
அப்படி இல்லை என்றால் தோனி ஓய்வு பெறவேண்டும் அல்லது ஓய்வு பெறக்கூடாது என்று மக்கள் கருத்துகளை பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்.

- Advertisement -

எனவே தோனி வெளிப்படையாக தனது கருத்தினை பேச வேண்டும். 100% உடல் தகுதியுடனும் பேட்டிங் திறமை இருந்தால் அவர் நிச்சயம் விளையாட வேண்டும் என்பதே எனது கருத்து. ஏனெனில் அவர் ஒரு திறமையான வீரர் அவர் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார். மேலும் அவரால் பழைய ஆக்ரோஷத்துடன் விளையாட முடியும். சில நேரங்களில் வயதானால் ஆட்டத்தில் மந்தம் ஏற்படும்.

Dhoni

ஆனால் தோனி ஆட்டம் அப்படி மந்தமாகி விட்டதாக எனக்குத் தெரியவில்லை. எனவே அவர் தன்னுடைய இயல்பான ஆட்டமான ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால் அவரை யாரும் ஓய்வுக்கு வற்புறுத்த மாட்டார்கள். தோனி ஆரம்ப காலகட்டத்தில் எவ்வாறு தனது ஆக்ரோஷத்தை காண்பித்து அதிரடியாக விளையாடினாரோ அதேபோன்று அதனைத் தொடர்ந்து வெளிப்படுத்தினால் அது அவருக்கும் நல்லது இந்திய அணிக்கும் நல்லது என்று அசாருதீன் கூறினார்.

- Advertisement -
Advertisement