இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவருதான். அதுக்கு இவர்தான் கரெக்ட்டா இருப்பாரு – அசாருதீன் அதிரடி

Azharuddin
- Advertisement -

இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடரில் 14வது சீசன் ஆரம்பிக்கும் நிலையில் அனைத்து அணிகளும் தற்போது இந்த ஐ.பி.எல் தொடருக்காக மும்முரமாக தயாராகி வருகின்றன. இதில் டெல்லி அணியின் கேப்டனாக காயமடைந்த ஸ்ரேயாஸ் அய்யக்கு பதிலாக டெல்லி அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலே டெல்லி அணி இந்த தொடரில் விளையாடவுள்ளது.

dc

- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் தனது திறனை மேம்படுத்தி உள்ளதால் அவரை தற்போது கிரிக்கெட் உலகமே வியந்து பாராட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் வருங்கால கேப்டனாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் ரிஷப் பண்டிடம் இருப்பதாக அசாருதீன் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த சில மாதங்களில் ரிஷப் பண்ட் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருவதாகவும் அனைத்து வடிவங்களிலும் தன்னை அவர் மேம்படுத்தி உள்ளதாகவும் பாராட்டியுள்ளார். மேலும் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை அவர் இன்னும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வார் என்றும் தற்போது கேப்டன் ஆகியுள்ள அவருக்கும் கோச் பாண்டிங்கிற்கும் இடையே சிறந்த புரிதல் இருப்பதால் நிச்சயம் அவர் கேப்டனாக ஜொலிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Pant-1

அதேபோன்று டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் கூறுகையில் : ரிஷப் பண்ட் நிச்சயம் டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி கேப்டன் மற்றும் பேட்டிங் என இரண்டு வகைகளிலும் சிறப்பாக பங்கினை அளிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

pant-2

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ள நிலையில் தற்போது முதன்முறையாக ரிஷப் பண்ட் டெல்லி அணியை தலைமை தாங்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பண்ட் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளார் என்றும் ஏற்கனவே பலர் அவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement