அகமதாபாத் மைதானத்தில் இப்படி பண்ணா நல்லா பேட்டிங் பண்ணலாம் – அட்வைஸ் செய்த அசாருதீன்

Azharuddin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்த நிலையில் இதற்கு காரணம் ஆடுகளம் தான் என இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் விமர்சிக்க தொடங்கினார். கடந்த சில தினங்களாகவே இந்த மைதானங்கள் குறித்து அதிக அளவில் விமர்சனங்கள் அளவில் எழுந்தன.

ind

- Advertisement -

மேலும் இந்த மைதானம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றதில்லை என்றும் கூறிவருகின்றனர். ஆனால் ஒருபுறம் இந்திய வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என அனைவரும் இந்த மைதானத்தில் எந்த வித குறையும் இல்லை என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த அகமதாபாத் மைதானத்தில் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் :

“அகமதாபாத் டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறியது ஏமாற்றமாக இருந்தது. இந்த மாதிரியான ட்ரையான (வறண்ட) ஆடுகளத்தில் விளையாடும்போது ஷாட் செலெக்ஷன் மற்றும் ஃபுட்வொர்க் ரொம்ப முக்கியம். அதேபோல ஸ்பைக் வைத்த ஷூவுக்கு மாற்றாக ரப்பர் சோல் வைத்த ஷூக்களை அணைந்து விளையாட வேண்டும்.

இதுமாதிரியான சவாலான ஆடுகளங்களில் அற்புதமான பேட்டிங் இன்னிங்ஸை விளையாடிய வீரர்கள் எல்லாம் ரப்பர் சோல் அணிந்திருந்தது அதற்கு முன் உதாரணம். ரன்களை எடுக்க ஓடும்போது சறுக்கும் என்ற வாதம் எழலாம். டென்னிஸ் வீரர்கள் ரப்பர் சோல் அணிந்து தான் அற்புதமாக விளையாடுகிறார்கள்.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி இந்தியாவுக்கு வந்து விளையாடிய பல கிரிக்கெட் லெஜெண்ட்களும் இதை செய்துள்ளனர்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அவர்.

Advertisement