சம்பளம் குறைக்கப்பட்டால் இதான் நடக்கும். இந்த நேரத்திலும் நிர்வாகத்துடன் சண்டையிடும் வீரர்கள் – விவரம் இதோ

Pak
- Advertisement -

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே பெரும் தள்ளாட்டத்திற்கு உட்பட்டு வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல நாடுகளின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விளையாட்டுப் போட்டிகளின் பொருளாதாரம் நலிவடைந்து கொண்டிருக்கிறது. சர்வதேச போட்டிகள் தொடங்கி உள்ளூர் போட்டிகள் வரை கிரிக்கெட், கால்பந்து என அனைத்துமே தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Deepak-Chahar

- Advertisement -

இதன் காரணமாக பல கிரிக்கெட் வாரியங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. வருவாய் இழப்பு காரணமாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பிடித்தம் செய்து விட்டு கொடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதே வேலைதான் பாகிஸ்தான் அணிக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது போலும். தற்போது அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய ஓப்பந்தத்தில் 19 சர்வதேச வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களது தரத்துக்கு தகுந்தபடி மாதத்திற்கு 3 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஊதியமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர். வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை சரி கட்டுவதற்கு வீரர்களின் சம்பளத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கைவைக்கும் என்றும் தெரிகிறது.

Pak-1

இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அசார் அலி ஒரு பேட்டியில் ஒரு சில புதிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கரோனா பாதிப்பு காரணமாக எந்த ஒரு நாட்டிலும் நல்ல சூழ்நிலை இல்லை. இந்த ஊரடங்கு இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால் பழைய மற்றும் புதிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக கேட்கும்.

- Advertisement -

அது போன்ற ஒரு சூழ்நிலை உருவாகி சம்பளத்தை குறைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டால் அதனை நாங்கள் மனரீதியாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க முயற்சி செய்து வருகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் போட்டியை கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை நடத்த உள்ள வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசிக்கலாம்.

Pakistan

ரசிகர்களும் வீட்டில் இருந்தபடியே போட்டிகளை தொலைக்காட்சியில் பார்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ இந்திய வீரர்களின் சம்பளத்தை பிடித்தம் இல்லாமல் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் அதேசமயம் இந்திய வீரர்கள் தானாக முன்வந்து நிதியுதவியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement