- Advertisement -
ஐ.பி.எல்

கேப்டன்சி விடயத்தில் தல தோனி எனக்கு கொடுத்த அட்வைஸ் இதுதான் – ஆயுஷ் மாத்ரே ஓபன்டாக்

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது சி.எஸ்.கே அணியில் இடம் பிடித்திருந்த வீரர்கள் சிலர் காயம் காரணமாக அவதிப்பட்டதால் ஒரு சில வீரர்களுக்கு மாற்று வீரராக அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு மும்பையை சேர்ந்த 17 வயதான ஆயுஷ் மாத்ரேவுக்கு சி.எஸ்.கே அணியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இந்த ஆண்டு 2026 ஐபிஎல் தொடரில் முதன்மை வீரராக சென்னை அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

தோனி எனக்கு கொடுத்த அட்வைஸ் இதுதான் : ஆயுஷ் மாத்ரே வெளிப்படை

அதோடு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை கேப்டனாக வென்று கொடுத்து அசத்தினார். அந்த உலகக் கோப்பை தொடரின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் அவர் தனது துவக்க வீரருக்கான இடத்தை இழந்தாலும் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

- Advertisement -

அந்த வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் மூன்றாவது வீரராக களமிறங்கி 17 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 38 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக சி.எஸ்.கே அணியில் தான் இணைந்தது குறித்தும் அப்போது தோனியிடம் இருந்து கிடைத்த அறிவுரைகள் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : ஐ.பி.எல் போட்டிகளில் சிஎஸ்கே போன்ற ஒரு பெரிய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பதை எனக்கு ஒரு கனவாக இருந்தது. கடந்த ஆண்டு நான் டிவியில் பார்த்த மகேந்திர சிங், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே ஆகியோருடன் ஓய்வறையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை அணி எனக்கு ஒரு குடும்பத்தைப் போல ஆதரவு தருகிறது.

- Advertisement -

பொதுவாகவே நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன். ஆனால் இங்குள்ள வீரர்களிடம் என்னால் சகஜமாக பழக முடிகிறது. அதோடு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தோனியுடன் நிறைய ஆலோசனைகளில் ஈடுபட்டேன். அதிலும் குறிப்பாக 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருந்த வேளையில் அவரிடம் கேப்டன்சி குறித்த அறிவுரைகளையும் பெற்றுக் கொண்டேன்.

இதையும் படிங்க : 5 போட்டி.. 63 ரன்ஸ்.. 105 ஸ்ட்ரைக் ரேட்.. விமர்சனத்துக்கு உள்ளான ருதுராஜ் கெய்க்வாட்டின் இடம் – விவரம் இதோ

அந்த வகையில் அவர் எனக்கு எப்போதுமே கேப்டனாக கோபத்தில் எந்த ஒரு முடிவு எடுக்கக்கூடாது என்றும் போட்டியின் சூழல் எவ்வளவு அழுத்தமாக இருந்தாலும் நிதானமாக எடுக்கும் முடிவுகளே நல்ல பலனை தரும் என்று தெரிவித்தார். அவரது ஆலோசனைகள் எனது கேப்டன்சியிலும் உதவியது என ஆயுஷ் மாத்ரே கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -