கடைசி டெஸ்ட் போட்டியிலும் இது நடந்தா நல்லாயிருக்கும் – ஆட்டநாயகன் அக்சர் படேல் மகிழ்ச்சி

axar
- Advertisement -

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பையும் இந்தியா கிட்டதட்ட நெருங்கி விட்டது. இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்களான அஸ்வின் மற்றும் அக்ஷர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.

ind

- Advertisement -

முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் 2 நாட்களில் 30 விக்கெட்டுகள் விழுந்தன. அதில் 28 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களால் மட்டுமே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அக்சர் படேல் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் போட்டி முடிந்து வெற்றிக்குறித்து பரிசளிப்பு விழாவில் கூறியதாவது:-

axar

பந்து வீச்சில் எனது இந்த செயல்பாட்டை தொடர விரும்புகிறேன். நான் பேட்டிங்கில் பங்களிப்பை அளிக்காமல் இருக்கும் போது பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விக்கெட் வீழ்த்துவதே எனது பலம். இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி இதுபோன்று விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகிறேன்.

axar1

இந்த ஆடுகளம் கடைசி டெஸ்ட் போட்டிக்கு அதே போன்று இருக்க வேண்டும். அதேபோல் நான் விக்கெட்டுகளையும் எடுக்க விரும்புகிறேன் என்றார். அவர் மைதானம் இதுபோன்று இருக்கவேண்டும் என்று கூறியிருந்தாலும் மற்றொரு புறம் இந்த மைதானத்தின் தன்மை சரியில்லை என இங்கிலாந்து அணி ஐ.சி.சி.யிடம் புகார் அளிக்கவுள்ளதாகஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement