DC vs SRH : ஒரு காபி ஆர்டர் பண்ணி குடிக்குறதுக்குள்ள இப்டியாடா பண்ணுவீங்க – அக்சர் படேல் கலகலப்பு

Axar Patel
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஏழு ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஒரு கட்டத்தில் 62 ரன்களுக்கு 5 விக்கெட்க்களை இழந்து தடுமாறியது.

Axar Patel

- Advertisement -

பின்னர் ஆறாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் 69 ரன்கள் குவித்து ஒரு டீசன்டான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களது இந்த பாட்னர்ஷிப் காரணமாக டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் குவித்தது.

பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது டெல்லி அணியின் அசத்தலான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவிக்க டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங்கின் போது 34 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரிகளுடன் 34 ரன்களை குவித்த அக்சர் படேல் முழுமையாக 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Axar Patel 1

இப்படி டெல்லி அணி பெற்ற அற்புதமான வெற்றிக்கு காரணமாக அக்சர் பட்டேலின் சிறப்பான ஆட்டம் அமைந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அக்சர் பட்டேல் கூறுகையில் : எனக்கு பந்துவீச்சில் இரண்டு விக்கெட் கைப்பற்றியதை விட பேட்டிங்கில் 34 ரன்கள் குவித்தது தான் மிகச் சிறப்பான பங்களிப்பு என நான் கருதுகிறேன்.

- Advertisement -

ஏனெனில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆரம்பத்தில் இரண்டு விக்கெட் விழுந்தவுடன் நான் ஒரு கட்டத்தில் காபி ஒன்றினை ஆர்டர் செய்தேன். அந்த காபி வருவதற்குள் ஒரே ஓவரில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழவே நான் அந்த காபியை கூட குடிக்காமல் அப்படியே வைத்து விட்டு பேட்டிங் செய்ய வந்து விட்டேன் என்று கலகலப்பாக பேசினார்.

இதையும் படிங்க : IPL 2023 : இப்போ கலாய்க்குறோம் அடுத்த மேட்ச்ல அடிச்சு காட்டுங்க பாப்போம் – இளம் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள், நடந்தது என்ன

அதோடு இந்த மைதானத்தில் எனது பந்துவீச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு இருப்பதால் நானும் குல்தீப் யாதவும் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன். எங்கள் அணி வீரர்கள் அனைவரது கூட்டு உழைப்பின் காரணமாகவே இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement