ஃபைனலில் க்ளாஸின் அடிச்சப்போ ரோஹித் இதைத் தான் சொன்னாரு.. ஃபார்முலாவே இல்லாம சாதிச்சுட்டாரு.. அக்சர் படேல்

Axar Patel
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வென்றது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக பார்படாஸ் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் 34/3 என சரிந்த இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது.

அப்போது 76 ரன்கள் குவித்த விராட் கோலியுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய அக்சர் பட்டேல் 47 ரன்கள் விளாசினார். அதனால் இந்தியா 20 ஓவரில் 176/7 ரன்கள் எடுக்க அவர் முக்கிய பங்காற்றினார். ஆனால் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட அவர் 4 ஓவரில் 49 ரன்கள் வாரி வழங்கினார் என்றே சொல்லலாம். குறிப்பாக 15வது ஓவரில் அவரை அடித்து நொறுக்கிய ஹென்றிச் கிளாசின் 24 ரன்கள் விளாசி கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றியை பறித்தார்.

- Advertisement -

அபாரமான ரோஹித்:
ஆனால் அதன் பின் பும்ரா, அர்ஷ்தீப் சிங், பாண்டியா ஆகியோரின் அபார பந்து வீச்சாலும் சூரியகுமாரின் அற்புதமான கேட்ச்சாலும் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் ஃபைனலில் க்ளாஸென் தம்மை அடித்து நொறுக்கிய போதும் கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு கொடுத்ததாக அக்சர் படேல் கூறியுள்ளார். அத்துடன் குறிப்பிட்ட ஃபார்முலாவை பின்பற்றாமல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பவுலர்களை பயன்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுத்த ரோகித் சர்மா புத்திசாலித்தனமான கேப்டன் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஃபைனலில் க்ளாஸென் எனக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். அப்போது பரவாயில்லை உங்களால் முடிந்தளவுக்கு சிறப்பாகவே பந்து வீசினீர்கள் என்று ரோஹித் என்னிடம் சொன்னார். குறிப்பாக நல்ல பந்தில் க்ளாஸென் அடித்தால் உங்களால் எதுவும் செய்ய முடியாது. அடுத்த பந்தில் கவனம் செலுத்துங்கள் என்று ரோஹித் சொன்னார்”

- Advertisement -

“அவரது வார்த்தைகள் எனக்கு தன்னம்பிக்கையை அதிகரித்தது. 4 ஓவர்கள் வீசிய பின்பும் “வெல்டன் கவலைப்படாதீர்கள்” என்று ரோஹித் சொன்னார். கேப்டன் அப்படி சொல்வது களத்தில் உங்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். ரோஹித் புத்திசாலித்தனமான கேப்டன். இந்த உலகக் கோப்பையில் அவருடைய கேப்டன்ஷியில் நீங்கள் செட்டான ஃபார்முலாவை பார்த்திருக்க முடியாது”

“சில போட்டிகளில் நான் பவர்பிளேவில் 2 ஓவர்கள் வீசினேன். மற்ற போட்டிகளில் பும்ரா ஆரம்பத்திலேயே வீசினார். அதே போல பேட்டிங்கில் பாண்டியாவுக்கு முன்பாக நானும் துபேவும் விளையாடினோம். அது கடினமான சூழ்நிலைகளில் எந்த வீரர் சிறப்பாக செயல்படுவார் என்பதை ரோஹித் சர்மா முன்கூட்டியே சிந்தித்து செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது”

இதையும் படிங்க: ஜடேஜாவின் ஒருநாள் கேரியரும் முடிகிறதா? தமிழக வீரரை வைத்து திட்டத்தை ஆரம்பித்த கம்பீர்.. வெளியான தகவல்

“அதே போல இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் எனக்கு முன் ஜடேஜா மற்றும் துபேவை அனுப்பினார். ஃபைனலில் 18வது ஓவருக்குள் பும்ரா தனது 4 ஓவர்களையும் வீசி விட்டார். அந்த வகையில் பல்வேறு தருணங்களில் பவுலர்களை மாற்றி மாற்றி அவர் பயன்படுத்தியது வெற்றியில் முக்கிய பங்காற்றியது. இது அனுபவத்தால் மட்டுமே கிடைக்கும்” என்று கூறினார்.

Advertisement