
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை இந்தியா வெற்றிகரமாக துவங்கியுள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை துபாயில் எதிர்கொண்ட இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக தௌஹீத் ஹ்ரிடாய் 100 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக இந்தியாவிற்கு கேப்டன் ரோஹித் சர்மா 41, சுப்மன் கில் 101*, ராகுல் 41* ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2013க்குப்பின் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் பயணத்தை இந்தியா வெற்றிகரமாகத் துவங்கியது.
முன்னதாக அந்தப் போட்டியில் ஒன்பதாவது ஓவரை இந்திய வீரர் அக்சர் பட்டேல் வீசினார். அதில் 2, 3வது பந்துகளில் தன்சித் ஹஸன், ரஹீம் ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பிய அவர் அடுத்ததாக வந்த ஜாகிர் அலிக்கு எதிராக நல்ல பந்தை வீசினார். அதை தவறாக கணித்த ஜாகிர் அலி எட்ஜ் கொடுத்தார். ஆனால் அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மா தவற விட்டார்.
அதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சரித்திர சாதனையை படைக்கும் வாய்ப்பை அக்சர் பட்டேல் கைக்கு கிடைத்தும் வாய்க்கு கிடைக்காமல் நல்ல விட்டார். இந்நிலையில் அந்த சரித்திர சாதனையை கிடைத்து விட்டதாக நினைத்து கொண்டாடிய தாம் கடைசியில் ரோஹித் விட்டதால் ஏமாற்றமடைந்ததாக அக்சர் கூறியுள்ளார். இருப்பினும் அது விளையாட்டின் ஒரு தங்கம் என்பதால் ரோஹித் மீது தவறில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் விக்கெட் கிடைத்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ராகுல் கேட்டதால் நடுவர் கொடுத்தார். பின்னர் இரண்டாவது விக்கெட்டை எடுத்த எனக்கு மூன்றாவது விக்கெட்டும் கிடைத்தது. எட்ஜ் கொடுக்கப்பட்ட போது எனக்கு ஹாட்ரிக் கிடைத்ததாக நினைத்த நான் கொண்டாடத் தொடங்கினேன்”
இதையும் படிங்க: வரலாற்று சாதனையை செய்த அக்சர் படேல்.. கோட்டை விட்டு மன்னிப்பு கேட்ட ரோஹித்.. நடந்தது என்ன?
“இருப்பினும் அதை (ரோகித் தவற விட்டதை) பார்த்தேன். அதனால் ரியாக்சன் கொடுக்காத நான் மீண்டும் பவுலிங் செய்ய வந்தேன். பரவாயில்லை அது விளையாட்டின் ஒரு அங்கம்” என்று மனதிற்குள் வருத்தம் இருந்தாலும் வெளியில் புன்னகையுடன் தனது கேப்டனை விட்டுக் கொடுக்காமல் பெருந்தன்மையாக பேசினார். இதை அடுத்து இந்தியா தங்களுடைய அடுத்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.