ஷமி அங்கிருந்து கம்பேக் கொடுப்பது இந்தியாவுக்கு பலம்.. யாருக்குமே நிலையான இடமில்லை.. அக்சர் படேல் பேட்டி

Axar Patel
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அத்தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் அக்சர் படேல் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் அந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்க உள்ளதாக அக்சர் படேல் கூறியுள்ளார்.

அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் முகமது ஷமி காயத்திலிருந்து கம்பேக் கொடுப்பது இந்திய அணிக்கு பெரிய பலம் என்றும் அவர் கூறியுள்ளார். 2023 உலகக் கோப்பையில் மிரட்டிய அவர் விட்ட இடத்திலிருந்து மீண்டும் விளையாடுவார் என்று அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நிலையான இடமில்லை:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “துவக்க வீரர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளார்கள். பின்ன 3 – 7 வரை பேட்டிங் செய்யக்கூடியவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட உள்ளார்கள். எனக்கு மட்டுமல்ல. இது அனைவருக்கும் பொருந்தும். யாருக்கும் நிலையான இடமில்லை. இவை அனைத்தும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அட்ஜஸ்ட் செய்து கொள்வதை பற்றியதாகும்”

“எங்கள் டி20 அணி செட்டிலாகி இருக்கிறது. பெரிய அழுத்தம் இல்லை. தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது நீங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் அது போன்ற விஷயங்கள் பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. ஷமி மீண்டும் வருவது எங்கள் அணிக்கு நேர்மறையான விஷயமாகும். உலகக்கோப்பை ஃபைனலில் கடைசியாக விளையாடிய அவர் தற்போது குணமடைந்து சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பையில் நன்றாக விளையாடினார்”

- Advertisement -

ஷமி கம்பேக்:

“அவரைப் போன்ற சீனியர் வீரர் மீண்டு வரும் பொழுது அணிக்கு பெரிய உத்வேகம் கிடைக்கும். ஷமி களத்தில் என்ன கொண்டு வருவார், அவரால் புதிய பந்திலும் டெத் ஓவர்களிலும் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும். களத்தில் அவர் இருப்பதும் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும்”

இதையும் படிங்க: 15 வருசம் விளையாடியும் என் நிலைமை இப்படி ஆகும்ன்னு நினைக்கல.. உமேஷ் யாதவ் வருத்தமான பேட்டி

“கடந்த உலகக் கோப்பையில் விட்ட இடத்திலிருந்து அவர் மீண்டும் இந்திய அணிக்காக தொடர்வார் என்று நம்புகிறோம்” எனக் கூறினார். இந்த வாய்ப்பில் ஷமி சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபிக்க உள்ளார். அவருடன் ஜஸ்ப்ரித் பும்ராவும் காயத்திலிருந்து குணமடைந்து வந்து விட்டால் சாம்பியன்ஸ் டிராபில் இந்தியாவின் பவுலிங் பட்டாசாக இருக்கும் என்றால் மிகையாகாது.

Advertisement