- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் நிகழ்த்த காத்திருக்கும் மாபெரும் சாதனை – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது ஜூலை நான்காம் தேதியான இன்று மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது.

அக்சர் படேல் நிகழ்த்த காத்திருக்கும் அசத்தல் சாதனை :

இவ்வேளையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் விளையாட இருக்கும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் அக்சர் படேல் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 97 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் ஒட்டுமொத்தமாக அவர் 99 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய இரண்டாவது டி20 போட்டியின் போது அவர் மேலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 100 விக்கெட்டுகளை கைப்பற்றுவார். அப்படி அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷிக்காக அந்த 2 பேரை எங்களால் ஏமாற்ற முடியாது.. அவசர முடிவு வேணாம் – மோர்கல் பேட்டி

ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களாக அர்ஷ்தீப் சிங், ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இருக்கும் வேளையில் அவர்களுடன் அக்சர் படேலும் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -