முதல் டெஸ்ட் போட்டியில் அக்சர் படேலுக்கு பதிலாக சபாஷ் நதீமை சேர்க்க காரணம் இதுதான் – பி.சி.சி.ஐ விளக்கம்

Axar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

axar 1

- Advertisement -

இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக சபாஷ் நதீம் மற்றும் ராகுல் ஆகியோரை இந்திய அணியில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது. மேலும் அக்சர் படேலின் விலகலுக்கான காரணத்தையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அதன்படி முதல் போட்டிக்கு தயாராகும் முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக அக்சர் படேல் முதல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். பயிற்சியின்போது முட்டி பகுதியில் காயமடைந்த அக்சர் படேல் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து கூறியதால் அவர் இன்றைய போட்டியில் சேர்க்கப்படவில்லை என்றும் அவருக்கு பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சாளரான நதீமுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

nadeem

ஏற்கனவே இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள நதீம் முதல்தர போட்டிகளில் 117 ஆட்டங்களில் விளையாடி அனுபவம் உள்ளவர் என்பதால் அவருக்கு இன்றைய போட்டியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement