அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மகத்தான சாதனை படைத்த அக்சர் படேல் – விவரம் இதோ

Axar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 329 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 134 ரன்களை மட்டுமே குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் சதம் மூலமாக இந்திய அணி 286 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடி 318 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ashwin 2

- Advertisement -

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் நதீம் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக பந்துவீசாத அவருக்கு பதிலாக மீண்டும் 2வது டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி வீரர்களை நிலைகுலையச் செய்த அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

axar 2

இதற்கு முன்னர் முகமது நிசார், வாமன் குமார், திலிப் தோஷி, நரேந்திர ஹிர்வாணி, அமித் மிஸ்ரா அஸ்வின், முகமது சமி ஆகியோர் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய அக்சர் படேல் : இந்த போட்டியில் விளையாடியது மிக சிறந்த அனுபவத்தை கொடுத்தது. முதல் போட்டியிலேயே 5 விக்கெட் விழுவது என்பது மிக சிறப்பானது.

axar 1

இந்த போட்டியில் பிட்சில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன என்று குல்தீப் யாதவ் என்னிடம் கூறினார். அதனை மனதில் வைத்துக் கொண்டு என்னுடைய பந்துவீச்சில் வேகத்தை மாற்றி மாற்றி வீசினேன். இதனால் பேட்ஸ்மென்கள் தவறு செய்ய ஆரம்பித்தார்கள் அதனால் விக்கெட்டுகள் கிடைத்தது என அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement