அறிமுகமான 2 போட்டியில் மிகப்பெரிய சாதனை பட்டியலில் இணைந்த அக்சர் படேல் – விவரம் இதோ

axar

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்துள்ளது. போட்டி ஆரம்பித்து இரண்டு நாட்களிலேயே இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக இரண்டு நாட்களுக்குள் இரு அணிகளும் சேர்த்து 30 விக்கெட்டுக்களை இந்த ஆட்டத்தில் இழந்துள்ளன.

ind

அதில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களும், 2 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 33 ரன்கள் மட்டுமே அதிகமாக அடித்தது 145 ரன்கள் குவித்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சறுக்கினாலும் இரண்டாவது இன்னிங்சில் போது சரிவில் இருந்து மீண்டு அதிக ரன்களை குறிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 81 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் காரணமாக 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

axar1

இந்த இலக்கினை இந்திய அணி வெறும் 7.4 ஓவரிலேயே அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் திகழ்ந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற இவர் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியின்போது சிறப்பாக பந்துவீசி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதுவே அவரது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டியை இங்கு விளையாடிய அக்சர் படேல் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

Axar

அந்த சாதனையை இந்திய அணிக்காக அறிமுகமான இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை அக்சர் பட்டேல் இந்த போட்டியின் மூலம் படைத்துள்ளார். இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அக்சர் பட்டேல் 4 இன்னிங்ஸ்களில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.