இந்தியா அசத்தல் வெற்றி : அறிமுக தொடரிலேயே மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய அக்சர் படேல் – விவரம் இதோ

Axar

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் குவிக்க அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 365 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

axar1

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவிற்கு மாற்று வீரராக அறிமுகமாகிய அக்சர் பட்டேல் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சபாஷ் நதீம் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சரியாக பந்துவீசாத காரணத்தினால் இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அக்சர் பட்டேல் அறிமுகமானார்.

அதில் இருந்து தற்போது வரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அக்சர் பட்டேல் 27 விக்கெட்டுகளை இந்த தொடரில் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் அது மட்டுமின்றி 5 விக்கெட்டுகளை அவர் இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் நான்கு முறை வீழ்த்தி அசத்தியுள்ளார். தொடர் முழுவதும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்மூலம் அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

axar

இதற்கு முன்னர் அறிமுக டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளை சாய்த்து இருந்த இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் இந்த சாதனையை வைத்திருந்தார். அதனை தற்போது அக்சர் படேல் முறியடித்துள்ளார். இந்த தொடர் முழுவதும் அக்சர் படேல் சுழலில் இங்கிலாந்து வீரர்கள் தவித்தனர் என்று கூறலாம். அந்த அளவிற்கு பல முன்னணி வீரர்களும் அவரது பந்து வீச்சை சமாளிக்க தடுமாறினர்.

- Advertisement -

axar 1

மேலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவர் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுத்தார். இந்த போட்டி முடிந்து வெற்றிக் கோப்பையை கையில் வாங்கிய கோலி அறிமுகத் தொடர் என்பதால் அதை அக்சர் பட்டேல் கைகளில் கொடுத்து அழகு பார்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.