- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததால் மீண்டும் துணை கேப்டனான நட்சத்திர வீரர் – விவரம் இதோ

இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்ததன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

தெ.ஆ தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் :

அதேபோன்று அவரது காயம் முழுமையாக குணமடையாததால் எதிர்வரும் ஒருநாள் தொடரில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இப்படி கேப்டன் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறாத வேளையில் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது காயத்தை சந்தித்த அவர் தற்போது தான் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். அவர் மீண்டும் முழுமையான உடற்தகுதியை எட்ட இன்னும் நாட்களாகும் என்பதனால் அவர் இந்த தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இப்படி கேப்டன் மற்றும் துணை கேப்டன் என இருவருமே காயத்தை சந்தித்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வேளையில் புதிய ஒருநாள் கேப்டனாக அனுபவ வீரரான கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக யார் இந்த தொடரில் செயல்பட இருக்கிறார்கள்? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியில் கே.எல் ராகுலுக்கு அடுத்து ரவீந்திர ஜடேஜா அனுபவ வீரராக இருந்தாலும் அவர் சமீபத்தில் இந்திய ஒருநாள் அணியில் உள்ளேயும், வெளியேயும் இருந்து வருகிறார். இதன் காரணமாக எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் அக்சர் படேலுக்கு மீண்டும் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியா அணி அறிவிப்பு – முழு லிஸ்ட் இதோ

கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடருக்கான ஒருநாள் அணியில் இடம்பெறாத ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவரை தாண்டி அக்சர் பட்டேலுக்கு இந்த தொடருக்கான துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -