இவங்க 2 பேர் மட்டும் இல்லனா. இந்நேரம் என்ன ஆயிருக்கும் – ஆபத்தில் இருந்து மீட்ட அற்புத ஜோடி

Axar Patel
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி பிப்ரவரி 17-ஆம் தேதி துவங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Shami 1

- Advertisement -

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை குவித்து நல்ல துவக்கத்தை கண்ட வேளையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் வழக்கம் போலவே இந்த போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 17 ரன்களில் முதல் விக்கெட்டாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.

பின்னர் 32 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா மற்றும் புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 54 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஆட்டம் இழந்து வெளியேறவே இந்திய அணி 66 ரன்களுக்கு எல்லாம் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

Axar Patel 1

அதன்பிறகு விராட் கோலி மற்றும் ஜடேஜா ஜோடி சற்று இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டிருந்தாலும் அணியின் எண்ணிக்கை 125 ரன்களில் இருந்தபோது ஜடேஜாவும் 26 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த கே.எஸ் பரத்தும் 6 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி 135 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது கோலியும் அதற்கு அடுத்த சில ஓவர்களிலேயே 44 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது.

- Advertisement -

அப்போது இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலிய அணி அடித்த 263 ரன்களை கூட அடிக்காது என்று பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் எட்டாவது விக்கெட் ஜோடி சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டு எட்டாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர்.

இதையும் படிங்க : நீங்க இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா? ரிஷப் பண்ட்டை நினைவுகூர்ந்து – ரசிகர்கள் பகிரும் கருத்து

இறுதியில் அஸ்வின் 37 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அக்சர் பட்டேல் 74 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களை குவித்து ஆஸ்திரேலியா அணியை விட 1 ரன் பின்தங்கிய நிலையில் உள்ளது. அக்சர் மற்றும் அஸ்வின் மட்டும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காவிட்டால் நிச்சயம் இந்திய அணி பெரிய பின்னடைவை இந்த போட்டியில் சந்தித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement