- Advertisement -
ஐ.பி.எல்

ஸ்டார்க் மாதிரி வர விரும்பல.. கடைசி ஓவரில் ராஜஸ்தானை சாய்க்க இதை தான் செஞ்சேன்.. ஆட்டநாயகன் ஆவேஷ்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் 36வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்து தங்களுடைய ஐந்தாவது வெற்றியை பெற்றது. இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 66, ஆயுஷ் படோனி 50, அப்துல் சமத் 30* ரன்கள் எடுத்த உதவியுடன் 181 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அடுத்த விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 178-5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 74, சூர்யவன்சி 34, கேப்டன் ரியான் பராக் 39 ரன்கள் எடுத்ததால் 17 ஓவரில் 156/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. அதனால் கண்டிப்பாக ராஜஸ்தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆட்டநாயகன் ஆவேஷ்:

ஆனால் அப்போது 18வது ஓவரில் ஜெய்ஸ்வால், ரியான் பராக்கை காலி செய்த ஆவேஸ் கான் கடைசி ஓவரில் ஹெட்மயரையும் அவுட்டாக்கி லக்னோவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது அவர் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்தார். அந்த வகையில் லக்னோவை வெற்றி பெற வைத்த அவர் மொத்தம் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் மிட்சேல் ஸ்டார்க் போல சூப்பர் ஓவர் வரை கொண்டு செல்ல விரும்பாத தாம் யார்க்கர் பந்துகளை வீசி வெற்றி பெற விரும்பியதாக ஆவேஷ் கான் கூறியுள்ளார். இந்தப் போட்டியில் கடைப்பிடித்த திட்டங்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கை நன்றாக இருக்கிறது. ஆரம்பத்தில் அந்த லேசான காயத்தால் கை உடைந்ததாக நினைத்தேன். அதனால் கடைசி ஓவரில் வென்ற பின் வெற்றியைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு கூட கிடைக்கவில்லை”

- Advertisement -

யார்க்கர் முக்கியம்:

“நான் மிட்சேல் ஸ்டார்க் போல வர விரும்பவில்லை. நல்ல ஆவேஷ் கானாக இருக்க விரும்புகிறேன். எனது நேரத்தை எடுத்து தெளிவுடன் பந்து வீச விரும்பினேன். குறிப்பாக யார்க்கர் பந்துகளை வீச விரும்பினேன். எனது செயல்பாடுகளில் கவனத்தை செலுத்த விரும்பினேன். கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் பௌண்டரியை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன்”

இதையும் படிங்க: வெறும் 2 ரன்ஸ்.. ராஜஸ்தான் கையில் வெற்றியை கடைசி 3 ஓவரில் பறித்த லக்னோ.. 2வது த்ரில்லர் சாதனை வெற்றி

“கடைசி ஓவரில் மில்லர் அந்த கேட்ச்சை பிடித்து விடுவார் என்று நினைத்தேன். அது தவறியதால் கடைசியில் தேவைப்பட்ட 4 ரன்கள் எட்ஜ் வாயிலாக பவுண்டரி செல்லலாம் என்றும் நினைத்தேன். எனவே என் யார்க்கர் பந்துகளை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். கடைசி ஓவரில் நேரம் எடுத்து பீல்ட் செட்டிங் செய்தோம். இந்தப் பெரிய தொடரில் இதே போல பவுலிங் செய்து எனது அணியின் வெற்றிகளில் பங்காற்ற விரும்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -