ஐ.பி.எல் தொடரால் இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட். மகிழ்ச்சியில் டெல்லி அணியின் வீரர் – விவரம் இதோ

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த இறுதிப் போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி பிசிசிஐ-யால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியே இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல கருத்துக்கள் முன் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி சில வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்தும் சில வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு கலவையான பல கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அதேவேளையில் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் சில குறிப்பிட்ட வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

avesh

அதனை தொடர்ந்து அவருக்கு தற்போது இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள 20 வீரர்களை தவிர்த்து ஸ்டாண்ட் பை வீரர்களாக 4 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒருவராக அவேஷ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரை தொடர்ந்து அபிமன்யு ஈஸ்வரன், அர்சன் நக்வஸ்வாலா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

avesh khan

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணியில் தற்போது இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரை போன்ற இந்திய அணியிலும் சிறப்பாக செயல்பட்டு அவர் வெற்றிகரமாக வீரராக அவர் மாறுவார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement