- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த விதிமுறையால் தான் அஸ்வின் மாதிரி பவுலர்ஸ் ஒன்டே கிரிக்கெட்டில் காணாம போய்ட்டாங்க.. கம்பீர் விமர்சனம்

நூற்றாண்டுக்கு முன்பாக துவங்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப பல விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் 90களின் இறுதியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் ஆகிய இருவரும் சமமாக போட்டியிடும் அளவுக்கு விதிமுறைகள் இருந்தது. அதனாலேயே அந்த காலகட்டங்களில் பேட்ஸ்மேன்கள் 50 ஓவரில் 250 ரன்கள் அடிப்பது கூட மிகவும் கடினமான இருந்தது.

ஆனால் நாளடைவில் ரசிகர்களை கவர்வதற்காக ஐசிசி அமைப்பே சில அடிப்படை விதிமுறைகளை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாற்றியது. எடுத்துக்காட்டாக நோபால் போட்டால் அதற்கு தண்டனையாக ப்ரீ ஹிட் விதிமுறையை சொல்லலாம். அதே போல தற்போது உலகில் உள்ள பெரும்பாலான மைதானங்களில் பவுண்டரியின் அளவு 55 – 70 மீட்டர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் அல்ட்டாக சிக்ஸர்களை பறக்க விடுகிறார்கள்.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
அதனால் இப்போதெல்லாம் 50 ஓவர்களில் எளிதாக 400 – 450 ரன்கள் அடிக்கப்படுகிறது. அதன் காரணமாக நவீன கிரிக்கெட்டில் பவுலர்களின் நிலைமை கத்தி மேல் நடப்பது போல இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு 2 புதிய பந்துகள் பயன்படுத்துவதால் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற பவுலர்கள் காணாமல் போய் விட்டதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “2 புதிய பந்துகள் பயன்படுத்துவது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு நடந்த மோசமான விஷயம் என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் எவ்வளவு விரல் ஸ்பின்னர்ள் விளையாடுகிறார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இங்கே நேதன் லயன் 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துள்ளார்”

- Advertisement -

“ஆனால் அவர்கள் ஒருநாள் அணியின் அங்கமாக இல்லை. இதற்கான காரணம் என்னவெனில் அவர்களைப் போன்ற ஸ்பின்னர்களுக்கு இங்கே எந்த உதவியும் கிடைப்பதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்த ஒருவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதை நினைத்து பாருங்கள். ஏனெனில் அவர்களுக்கு விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காததால் துடுப்பாட்டத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்”

இதையும் படிங்க: அடுத்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் குறித்த தோனியின் முடிவு என்ன? – சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன்

“அதே போல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் என்பது முற்றிலுமாக காணாமல் போய் விட்டது. எனவே நான் ரிவர்ஸ் ஸ்விங்கை பார்க்க விரும்புகிறேன். பேட்ஸ்மேன்கள் சவாலை சந்திப்பதை பார்க்க விரும்புகிறேன். 150 கிலோமீட்டர் வேகத்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்து வீசக்கூடிய ஒருவரை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள் என்பது நீக்கப்பட வேண்டிய விதிமுறை” என்று கூறினார்.

- Advertisement -