டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணியின் முதல் இடத்திற்கு வந்த ஆபத்து – விவரம் இதோ

Ind-1
- Advertisement -

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் 9 முன்னணி அணிகளுக்கு 72 போட்டிகள் நடைபெறும். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2019 ஆம் ஆண்டு முதல் 21-ஆம் ஆண்டு வரை நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

Ind

- Advertisement -

இந்நிலையில் இதற்கான புள்ளிப்பட்டியல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கியதிலிருந்து கணக்கில் கொள்ளப்பட்டது. அதன்படி இதுநாள் வரை இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று (மூன்று தொடர்) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா தற்போது இந்திய அணியை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஏனெனில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 120 புள்ளிகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் 80 புள்ளிகள் கிடைத்துள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தற்போது 256 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிட்னியில் நடக்கும் கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தும் பட்சத்தில் மேலும் புள்ளிகள் அதிகரித்து 306 புள்ளிகளைப் பெற்று விடும். அப்போது இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணி 54 புள்ளிகள் வித்தியாசத்திலேயே இடைவெளி இருக்கும்.

Aus

மேலும் இந்தியாவிற்கு பிப்ரவரி மாதமே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் உள்ளது அதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி முதலிடத்தை இழக்க நேரிடும் என்று தெரிகிறது. இருப்பினும் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் பட்சத்தில் முதலிடத்தில் நீடிக்கும் என்றும் கருதப்படுகிறது.

Advertisement