வீடியோ வெளியிட்டு கோலியை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய.! வீடியோ இதோ

- Advertisement -

இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக உள்ள கோலி இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அதே போல டெஸ்ட் போட்டி தர வரிசையில் இந்திய அணியை தொடர்ந்து முதல் இடத்தில் வைத்து வருகிறார். கோலியின் திறமை குறித்து வேற்று நாட்டு அணி வீரர்களும் புகழ்ந்து வரும் நிலையில் கோலியை கிண்டல் செய்யும் விதத்தில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Virat Kohli's England issues

Virat Kohli's favourite shot in England ????

Posted by FOX Sports Australia on Monday, July 30, 2018

கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 1)துவங்க இருக்கிறது. இந்திய அணி 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் இங்கிலாந்து சென்றுள்ளது என்பது குறிப்பைடத்தக்கது. 2014 ஆம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

அந்த தொடரில் இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கபடும் கோலி 10 இன்னிங்ஸில் 134 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மேலும், அந்த தொடரில் 10 இன்னிங்ஸ்ஸில் 7 முறை பேட்டின் எட்ஜ் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

viratkholi

இந்நிலையில் தற்போது கோலியை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று கோலி அவுட்டான பந்துகளை எல்லாம் தொகுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, இது தான் கோலிக்கு மிகவும் பிடித்த ஷாட் என்று கிண்டலடித்துள்ளார். இந்த விடயம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement