ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களின் நிலை என்ன ? – நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு

Aus-ipl
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது இங்கு ஏற்பட்ட கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த பிசிசிஐ அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

IPL

- Advertisement -

அதன்படி தற்போது இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனைத்து அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. சர்வதேச அணிகளில் இருந்து ஐபிஎல் அணிகளில் விளையாடும் வீரர்களுக்கு போட்டிகள் இல்லை எனில் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளலாம் என்று கிரிக்கெட் நிர்வாகங்கள் அறிவித்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களின் நிலை என்ன என்பதே அனைவரது கேள்வியாக இருந்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயோ பபுள் வளையத்தில் நடைபெறுவதால் இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்கலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும் அவர்களுக்கான தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தின் விளையாடவும் அதன் பின்னர் அங்கு நடைபெறவிருக்கும் ஐசிசி t20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது.

warner

இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்களின் பங்கு முக்கியம் என்பதால் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு இது ஒரு நற்செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement