ICC வெளிட்ட புதிய தரவரிசை பட்டியல்.! இந்திய அணி எத்தனையாவது இடத்தில் தெரியுமா..!

worldcup
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியில் டிம் பைனி புதிய கேப்டனாக நியமிக்கபட்டார்.

australia

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட கடந்த ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்து சென்றது. இந்த தொடரின் முதல் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆனால் இந்த தொடரின் முதல் இரண்டு ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்விடைந்துள்ளது குறித்து ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்ச்சியாளர் ஜஸ்டின் லங்ஜர் தெரிவிக்கையில் ‘எங்கள் அணியில் 3 முக்கிய வேக பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆக்ஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியை நொறுகினர். எனவே, எங்களுடைய அணியில் தோல்வியிலிருந்து மீண்டு இந்த தொடரை கைப்பற்றும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ranking

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றதுன் மூலம் உலக தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலைய அணி 6 வது இடத்தில் உள்ளது.இந்த தொடரில் இன்னும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் டாப் 10 அணி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 5 வது இடத்திற்கு முன்னேறும். மேலும், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் இந்தியாவும், 3 மற்றும் 4 வது இடத்தில் தென்னாபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இருந்து வருகிறது.

Advertisement