IND vs AUS : ஆஸி ஆறுதல் வெற்றி.. 2023 உ.கோ முன் சேசிங் செய்ய முடியாத மைதானத்தில் தவறான முடிவால் இந்தியா தோற்றது எப்படி?

- Advertisement -

ஆசிய கோப்பை வெற்றியை தொடர்ந்து 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் நகரில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 56 (34), மிட்சேல் மார்ஷ் 96 (84), ஸ்டீவ் ஸ்மித் 74 (61), மார்னஸ் லபுஸ்ஷேன் 72 (58) ரன்கள் எடுத்ததால் 400 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதன் பின் அலெக்ஸ் கேரி 11, மேக்ஸ்வெல் 5, கேமரூன் க்ரீன் 9 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:
ஆனாலும் 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 352 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 353 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடிய போதும் மறுபுறம் வித்தியாசம் முடிவாக களமிறங்கி தடுமாறிய வாஷிங்டன் சுந்தர் 18 (30) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 81 (57) ரன்கள் எடுத்து போது அவுட்டாக்கிய மேக்ஸ்வெல் மறுபுறம் தன்னுடைய தரத்தை காட்டிய விராட் கோலியையும் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 (61) ரன்களில் அவுட்டாக்கி திருப்புமுனையை உண்டாக்கினார். அதனால் சரிவை சந்தித்த இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் 48 (43) ரன்கள் எடுத்து போராடிய ஸ்ரேயாஸ் ஐயரும் அவரின் சுழலிலேயே சிக்கிய நிலையில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட கேஎல் ராகுலும் 26 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

அந்த சமயத்தில் கடந்த 2 போட்டிகளைப் போல் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த சூரியகுமார் யாதவ் 8 ரன்களில் அவுட்டாக கடைசியில் ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் எடுத்து போராடியும் இந்தியா 49.4 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு 5 தொடர் தோல்விகளுக்கு பின் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இப்போட்டியில் ஆரம்பத்திலேயே இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது பெரிய பின்னடைவை கொடுத்தது. அதை விட இம்மைதானத்தில் சேசிங் செய்த அணி வென்றதில்லை என்ற சூழ்நிலையில் சுந்தருக்கு பதிலாக ராகுல் துவக்க வீரராக களமிறங்கி ஆரம்பத்திலேயே ரோகித் போல அதிரடியாக ரன்கள் சேர்த்திருந்தால் ஒருவேளை இந்தியா வென்றிருக்கலாம்.

இதையும் படிங்க: 2023 உலக கோப்பையுடன் 24 வயதிலேயே திடீரென ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்.. ரசிகர்கள் ஏமாற்றம்

அதே போல முக்கிய வீரர்கள் இல்லாமல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்றைய போட்டியில் சுமாராக செயல்பட்டு தோல்வியை சந்தித்த போதிலும் இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்று உலக கோப்பைக்கு தயாராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement