வெளுத்துக்கட்டிய வார்னர். பிரித்தெடுத்த பின்ச். இந்த அணி மோசமான தோல்வி – விவரம் இதோ

Finch
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை மைதானத்தில் துவங்கியது.

aus

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 74 ரன்களை குவித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து முடித்தது.

- Advertisement -

இந்த போட்டியின் துவக்கத்திலிருந்தே ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் அணியின் கேப்டன் பின்ச் ஆகியோர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபுறத்திலும் சிதறடித்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் சதமடித்து முறையே 128 மற்றும் 110 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி எந்த ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

Warner

37.4 ஓவர்களில் 258 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நினைத்த இந்திய பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட விக்கெட்டை கைப்பற்றவில்லை அனைத்து ஓவர்களிலும் சரமாரியாக ரன் மழை பொழிந்து எளிதாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகன் விருதினை தட்டிச்சென்றார்.

Advertisement