மூன்றாவது போட்டியில் இந்திய அணியை மிரட்ட வரும் ஆஸ்திரேலிய அதிரடி புயல் – அணி வீரர்களின் விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வைக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி ஜனவரி 7 ஆம் தேதி அன்று சிட்னி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு பெருகியுள்ளது.

indvsaus

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியில் ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணி சார்பில் ஒரு முக்கிய வீரரும் அணியில் இணைய இருப்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் அடைந்த காயத்தால் டி20 தொடரில் முற்றிலும் விளையாடவில்லை. மேலும் அந்த தொடரில் ஓய்வு எடுத்த அவர் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் வார்னர் காயம் சரியாகாததன் காரணமாக விளையாடவில்லை. அதன் பிறகு தற்போது மீண்டும் கடைசி இரண்டு போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் விளையாடுவார் என்று ஆசிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் அவர் 100% பிட்டாக இருக்கிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்று அந்த அணியின் துணை பயிற்சியாளர் கூறியுள்ளார்.

warner 1

ஆனாலும் அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவது குறித்து வார்னர் உறுதியாக உள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி தடுமாற்றத்திற்கு காரணம் தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாதே காரணம் எனவே துவக்க வீரராக வார்னர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் டெஸ்ட் தொடரிலும் தற்போது இந்திய அணியை எதிர்த்து சிறப்பாக விளையாடி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று காயத்திலிருந்து மீண்டு ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளதால் இந்திய அணியும் பலம் வாய்ந்ததாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Warner

கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி இதோ : :

1. டிம் பெய்ன் (கேப்டன்), 2. சீன் அப்போட், 3. பேட் கம்மின்ஸ், 4. கேமரூன் கிரீன், 5. மார்கஸ் ஹாரிஸ், 6. ஜோஷ் ஹசில்வுட், 7. டிராவிட் ஹெட், 8. மோசஸ் ஹென்ரிக்ஸ், 9. மார்னஸ் லாபஸ்சேன், 10. நாதன் லயன், 11. மைக்கேல் நேசர், 12. ஜேம்ஸ் பேட்டின்சன், 13. வில் புகோவ்ஸ்கி, 14. ஸ்டீவ் ஸ்மித், 15. மிட்செல் ஸ்டார்க், 16. மிட்செல் ஸ்வெப்சன், 17. மேத்யூ வடே, 18. டேவிட் வார்னர்.

Advertisement