டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா – கேப்டன் யார் ?

australia
- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள நான்கு அணிகளும் தகுதி சுற்று போட்டிகளின் அடைப்படையில் இந்த தொடரில் இணையும் என்று கூறப்பட்டுள்ளது.

Cup

- Advertisement -

அதன்படி 12 அணிகள் பங்கேற்கும் இந்த மிகப்பெரிய தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரின் குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. அதேபோன்று குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன.

ஏற்கனவே இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போது இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணியின் 15 பேர் கொண்ட அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரரான ஆரோன் பின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

aus

மற்றபடி சமீபத்தில் ஓய்வில் இருந்த முன்னணி வீரர்கள் அனைவரும் அணியில் இணைந்துள்ளனர். இந்த 15 பேர் தவிர்த்து ரிசர்வ் வீரர்களாக டேனியல் சாம்ஸ், டேன் கிறிஸ்டின் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இதோ :

1) ஆரோன் பின்ச் (கேப்டன்), 2) டேவிட் வார்னர், 3) ஸ்டீவ் ஸ்மித், 4) கிளென் மேக்ஸ்வெல், 5) மிட்சல் மார்ஷ், 6) மேத்யூ வேட், 7) ஆஷ்டன் அகர், 8) பேட் கம்மின்ஸ், 9) மிட்சல் ஸ்டார்க், 10) கேன் ரிச்சர்ட்ஸன், 11) ஆடம் ஸாம்பா, 12) ஜோஷ் ஹேசல்வுட், 13) மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 14) மிட்சல் ஸ்வப்சன், 15) ஜோஷ் இங்லிஸ்

Advertisement