இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் விளையாட வரவேண்டாம் – இந்திய அணியை எச்சரித்த மாநில நிர்வாகம்

Rohith
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட “பார்டர் கவாஸ்கர்” டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

Gill

- Advertisement -

இதனால் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கிறது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி நியூசவுத் வேல்சில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொள்ள இன்று சிட்னி வருகின்றனர். இந்நிலையில் நியூசவுத் வேல்சில் மற்றும் பிரிஸ்பேனில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது.

இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடயிருக்கும் இந்திய அணிக்கு பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே நியூ சவுத் வேல்ஸில் புதிதாக 8 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளாதால் குயின்ஸ்லாந்து மாகாண அரசு எல்லைகள் மூடப்பட்டது. இதனால் சிட்னியில் இருந்து பிரிஸ்பேனுக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

IND

இதனால் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் பிரிஸ்பேனுக்கு செல்வது கடுமையாக இருக்கும். பிரிஸ்பேன் பாதுகாப்பு விதிகளின்படி ஹோட்டல் அறை மற்றும் மைதானத்தை விட்டு வெளியே இந்திய வீரர்கள் செல்லக்கூடாது. இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய வீரர்கள் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சிட்னியில் நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளதாக பேசப்படுகிறது.
இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாகாண சுகாதார அமைச்சர் ராஸ் பேட்ஸ் கூறுகையில் :

Umesh-2

“இந்தியர்கள் விதிகளைப் பின்பற்ற விரும்பவில்லை என்றால், அவர்கள் பிரிஸ்பேனுக்கு வரவேற்கப்படுவதில்லை” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் டிம் மந்தர் கூறுகையில் “எல்லோருக்கும் பொதுவான விதிகள் தான். விதிகளை இந்திய கிரிக்கெட் அணி மீற விரும்பினால் 4வது டெஸ்ட் போட்டிக்காக பிரிஸ்பேன் வர வேண்டாம்” என்றார்.

Advertisement