
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சொந்த ஊரிலேயே இந்தியா ஒய்ட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் இத்தொடரில் தோற்கும் என்று கணித்தவர்களுக்கு முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா இல்லாமல் பும்ரா தலைமையில் இந்தியா வென்று பதிலடி கொடுத்துள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் குறைத்து மதிப்பிட்ட விளையாடிய ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டிக்கு முன்பாக கான்பெரா நகரில் இந்திய அணியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பென்ஸி சந்தித்தார். அப்போது இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா அவரிடம் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது முதல் போட்டியில் கிட்டத்தட்ட தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பும்ராவை “உங்களுடைய ஸ்டைல் மற்றவர்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமானது. உங்களிடமிருந்து சிறந்த முயற்சி” என்று பிரதமர் வேற லெவலில் பாராட்டினார். அதற்கு பும்ரா மிகவும் பணிவுடன் நன்றி என்று பதிலளித்தார். அடுத்ததாக விராட் கோலியிடம் பிரதமர் பேசியது பின்வருமாறு.
“பெர்த்தில் நல்ல நேரம். அந்த நேரத்தில் நாங்கள் போதுமான துன்பத்தை அனுபவிக்கவில்லை என்பது போல இருந்தது” என்று ஆஸ்திரேலியாவுக்கு நல்ல தோல்வியை கொடுத்து விட்டீர்கள் என்ற வகையில் பாராட்டினார். அதற்கு விராட் கோலி “எப்போதும் நம் சொந்த மசாலாவை அதில் சேர்க்க வேண்டும்” என்று ஜாலியாக பிரதமருக்கு பதிலளித்தார். அதற்கு “இந்தியராக இருந்தால் அப்படித்தான் இருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும்” என்று விராட் கோலிக்கு மீண்டும் பிரதமர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: ஸ்டீவ் வாக் மாதிரி.. இதை செய்யாத ஆஸியை நொறுக்கிய ஜெய்ஸ்வால் உலகின் சிறந்த இளம் புயல்.. மைக்கேல் வாகன்
அதைத்தொடர்ந்து அஸ்வின் உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களுக்கும் வரிசையாக கை கொடுத்து பிரதமர் பாராட்டினார். இறுதியாக அந்த சந்திப்பு பற்றி “இந்திய அணிக்கு எதிராக பிரதமர் லெவன் அணிக்கு பயிற்சி போட்டியில் பெரிய சவால் காத்திருக்கிறது. இருப்பினும் நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு கொடுப்பேன்” என்று ஆண்டனி அல்பென்ஸி தனது இன்ஸ்டாகிராமில் இந்தியாவின் பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.