- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களையும் மிரளவைத்த இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா – என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் பலம் வாய்ந்த இரு அணிகளும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதனால் சுவாரசியமான தொடராக பார்க்கப்படும் இந்த டெஸ்ட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. எப்பொழுதுமே ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய அணியின் வீரர்களை சீண்டுவதும், இந்திய வீரர்கள் அதற்கு பதிலடி கொடுப்பதும் என இந்த டெஸ்ட் தொடரானது அனல் பறக்கும் தொடராக இருக்கும்.

ஜஸ்ப்ரீத் பும்ராவை கண்டு அஞ்சும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் :

அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணித்துள்ள இந்திய அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த முதல் போட்டியில் முதல் இரண்டு நாட்களே போட்டி நடைபெற்று இருக்கும் வேளையில் இந்த போட்டி தற்போதே சூடு பிடித்துள்ளது.

- Advertisement -

அதாவது இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுக்க இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய பவுலர்கள் தொடர்ந்து மைதானத்தில் சீண்டி இருந்தனர். அதே வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியானது அவர்களை 104 ரன்களுக்கு சுருட்டி 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனான ஜஸ்ப்ரீத் பும்ரா அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 18 ஓவர்களை வீசிய பும்ரா 30 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 11-வது முறையாக 5 விக்கெட்ட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் மூலமாக ஆஸ்திரேலியா எளிதில் வீழ்ந்தது.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த பந்துவீச்சை பார்த்து ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் பயந்ததோடு சேர்த்து தற்போது ரசிகர்களும் அச்சமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. ஏனெனில் மிகச் சிறப்பான பந்துவீச்சை பும்ரா வெளிப்படுத்தியுள்ள வேளையில் அவரது பந்துவீச்சு விதிமுறைகளுக்கு புறம்பானது அவரை தடை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஒரு புது குற்றச்சாட்டை முன்வைத்து சில கருத்துக்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு காரணம் யாதெனில் :

இதையும் படிங்க : மிட்சல் ஸ்டார்க்கா இது? இதுதாங்க டெஸ்ட் கிரிக்கெட்.. என்ன வேணும்னா நடக்கும் – பெர்த் டெஸ்ட் சுவாரசிய சம்பவம்

பும்ராவின் வித்தியாசமான ஆக்சன் மூலம் ஆஸ்திரேலியா வீரர்கள் சரணடைந்ததாலே இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு சர்ச்சையை உண்டாக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் இவ்வாறு செய்துள்ளனர். ஆனாலும் கடந்த பல ஆண்டுகளாகவே பும்ரா இதே ஸ்டைலுடன் தான் பந்து வீசி வருவதால் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிகிறது.

- Advertisement -