ஐ.பி.எல் எங்க நடந்தாலும் இவங்கள விளையாட விடமாட்டோம் – போர்க்கொடி தூக்கிய நிர்வாகம்

Ipl cup
- Advertisement -

கரோனா வைரசின் தாக்கம் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பின்னர் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பதும் கேள்விக்குறிதான். அப்படியே நடந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்வது மிகவும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

IPL

- Advertisement -

குறிப்பாக ஆஸ்திரேலியாவிலிருந்து 17 வீரர்களை பல்வேறு ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இவர்கள் இந்தியா வந்து விளையாடுவார்களா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் இதுகுறித்து வீரர்களுக்கு எதுவும் அறிவுறுத்தவில்லை.

இது வீரர்களின் தனிப்பட்ட முறை ஒப்பந்தமாகும். இதனால் அவர்களின் தனிப்பட்ட முடிவை பொறுத்ததே ஆகும். வீரர்களுக்கு நாங்கள் சின்ன அறிவுரை தான் வழங்க முடியும். முடிவு வீரர்கள் உடையதுதான். எனவே இதுபோன்ற நிச்சயமற்ற சூழலில் வீரர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

aus

மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகமொன்று புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ஐபிஎல் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் வைரஸ் தாக்கம் குறையும்வரை வீரர்கள் பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி போட்டிகளை தவிர்ப்பதும் நல்லது என்று கூறியுள்ளனர். மேலும் பயணங்களை தவிர்க்கவும் அவர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கோரிக்கையை வைத்துள்ளது.

aus

அதுமட்டுமின்றி ஏப்ரல் 15 தேதிவரை விசா வழங்கப்பட மாட்டாது என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமின்றி மற்ற வெளிநாட்டு வீரர்களும் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

Advertisement