இப்படி நடந்ததுக்கு அப்புறம் ஜெயிக்க வாய்ப்பே இல்ல.. முதல் நாளே இந்தியாவின் கதையை முடித்த ஆஸ்திரேலியா

AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மெல்போர்ன் நகரில் இன்று டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் நாள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

மெல்போர்ன் டெஸ்டில் ஓங்கிய ஆஸ்திரேலியாவின் கை :

இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்து பலமான நிலையில் இருக்கும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் நிகழ்த்திய சம்பவம் ஒன்று இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்யும் புள்ளிவிவரமாக மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியார் ஆஸ்திரேலியா அணிக்காக துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவருமே முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

இந்த போட்டியின் முதல் விக்கெட்டாக சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து உஸ்மான் கவாஜா 57 ரன்கள் எடுத்து இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் இருவருமே இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அரைசதம் கடந்துள்ளனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இதேபோன்று ஒன்பது முறை ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்தபோது ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்திக்கவில்லை. அதனை தொடர்ந்து தற்போது பத்தாவது முறையாக இதுபோன்ற சம்பவம் இந்த போட்டியில் நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க : அவர் பயமின்றி அடிக்க சொல்லிட்டாரு.. பும்ராவை மீண்டும் நொறுக்க வருவேன்.. சவால் விட்ட 19 வயது ஆஸி வீரர்

இதன் காரணமாக இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடையாது என்று இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இருப்பினும் இந்த டெஸ்ட் போட்டியானது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முக்கியமான போட்டியாக இந்திய அணிக்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement