- Advertisement -
உலக கிரிக்கெட்

55 ஆண்டுகால வரலாற்றில் பரிதாப சாதனையை சந்தித்த ஆஸ்திரேலிய அணி – மீண்டும் வங்கதேசம் அசத்தல்

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே டாக்கா நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று டாக்கா நகரில் நடைபெற்று வருகிறது.

மோசமான சாதனைக்கு ஆளான ஆஸ்திரேலிய அணி :

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்திருந்தது. மழை காரணமாக இந்த போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 41 ஓவர்களில் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

கிட்டத்தட்ட இந்த போட்டியிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்ற காத்திருக்கிறது. இவ்வேளையில் இந்த போட்டியின் போது டாஸ் வென்று முதலில் விளையாடி ஆஸ்திரேலியா அணி ரன் எதுவும் எடுக்கும் முன்னதாகவே மூன்று விக்கெட்டுகளை தவறவிட்டது. இந்த போட்டியின் முதலாவது ஓவரில் நான்காவது பந்தில் முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது ஓவரின் முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட்டை இழந்தது.

இதன் காரணமாக முதல் இரண்டு ஓவர்களின் முடிவில் ரன் எதுவும் இருக்காமல் மூன்று விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையை சந்தித்தது. அதாவது கடந்த 1971-ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி 55 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக ரன் எதுவும் எடுக்காமலே மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 2027 உலககோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா? – அஷ்வின் கருத்து

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகள் ரன் எதுவும் எடுக்காமல் மூன்று விக்கெட்டுகளை இழந்த அணிகளாக இருந்த வேளையில் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ரன் கணக்கை துவங்காமலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்த மோசமான சாதனை பட்டியலில் மூன்றாவது அணியாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -