சிராஜ் மற்றும் பும்ராவை குறிவைத்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் பயன்படுத்திய 2 வார்த்தைகள் – வெளியான தகவல்

Siraj-3
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று முடிந்தது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித், புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர்.

INDvsAUS

- Advertisement -

இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிஸ்சில் 312ரன்கள் குவித்து. அதன்பிறகு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்து டிரா செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய வீரர்களான முகமது சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் கடந்த இரண்டு நாட்களாக அவர்களை இனரீதியாக அழைத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சிராஜ், பும்ரா இருவரும் தங்களது கேப்டன் ரஹானேவிடம் புகார் செய்தனர். இதனை ரஹானே மைதானத்தில் இருந்த நடுவர்களிடம் புகார் செய்தார். மேலும் மேட்ச் ரெஃப்ரி டேவிட் பூனிடமும் இதுகுறித்து இந்திய அணி புகார் அளித்தது.

Siraj 2

இதுபோன்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் வீரர்களை இனரீதியாக அழைத்து சர்ச்சை ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் பும்ராவை ஆஸ்திரேலிய ரசிகர்கள் எவ்வாறு இனரீதியாக தாக்கியதை எதிர்த்து நடவடிக்கை எடுக்க விடும் என்றும் பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் இந்திய வீரரான முகம்மது சிராஜை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் “பிரவுன் டாக்” (brown dog) “பிக் மங்க்கி” (big monkey) என்று இன ரீதியாக அழைத்துள்ளதாக தற்போது கூறப்படுகிறது. இதே வார்த்தையை பும்ராவுக்கு எதிராகவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement