எதிர்பாத்தது போலவே முகமது சிராஜை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்.. களைகட்டிய காபா – என்ன நடந்தது?

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றது.

சிராஜை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள் :

அடிலெய்டில் நடைபெற்ற அந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் கடந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸை முகமது சிராஜ் முடிவுக்கு கொண்டு வந்து அவரது விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடியிருந்தார். அப்போது டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்து வெளியேறுகையில் :

- Advertisement -

முகமது சிராஜை பார்த்து ஏதோ பேச முகமது சிராஜும் அவரை ஆவேசமாக திட்டி பதிலடி கொடுத்திருந்தார். இப்படி இருவருமே மைதானத்தில் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. அதோடு இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு இந்த பிரச்சனை குறித்து விசாரித்த ஐசிசி இருவருக்குமே அபராதம் விதித்து அதிரடி காட்டி இருந்தது.

இப்படி சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் மோதிக்கொண்டதுக்கு பின்னர் நிச்சயம் மூன்றாவது போட்டியில் முகமது சிராஜை வர்ணித்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஏதாவது செய்வார்கள்? என்று எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி இன்று காபா மைதானத்தில் துவங்கியது.

- Advertisement -

இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தற்போது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த முதல் இன்னிங்சின் போது முதல் ஸ்பெல்லை முகமது சிராஜ் வீச வருகையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினர். அதோடு அவரை கடுமையாக வசைபாடினர்.

இதையும் படிங்க : இங்க உள்ள வந்ததுமே அந்த பாசிட்டிவ் வைப் வந்துடுச்சி.. காபா மைதானத்தில் என்ட்ரி கொடுத்த பின் – பண்ட் பேட்டி

இதன் காரணமாக திகைத்து நின்ற முகமது சிராஜ் சில நொடிகள் திகைத்து நின்று பின்னர் மீண்டும் இயல்பாக பந்துவீச ஆரம்பித்தார். இப்படி போட்டியின் முதல் நாளே இந்திய வீரரை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சீண்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது இந்த போட்டியின் சுவாரசியத்தை கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement