முகமது சிராஜை நிறவெறி வைத்து சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள் – என்ன சொல்லி கூப்பிட்டாங்க தெரியுமா ?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது என்றே கூறலாம்.

Gill

இந்நிலையில் இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் வீரர்களான முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் நிறவெறியை வைத்து மைதானத்தில் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மற்றும் கேப்டன் ரஹானே ஆகியோர் இணைந்து மைதானத்தில் இருந்த அம்பயரிடம் புகார் தெரிவித்தனர்.

மேலும் பி.சி.சி.ஐ யும் இந்த புகாரினை விசாரிக்கும்படி ஆஸ்திரேலிய நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி பந்து வீச்சுக்கு பிறகு பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜை நோக்கி பவுண்டரி லைனில் அருகில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் குடித்து விட்டு அவரது முகத்தை நோக்கி நிறவெறியை வைத்து தாக்கி பேசியதாகவும் மேலும் அவரது அம்மா குறித்து சில வார்த்தைகளை தவறுதலாக பயன்படுத்தியதாகவும் அதுமட்டுமின்றி சிராஜை நோக்கி குரங்கு என அழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Siraj 2

ஆஸ்திரேலிய ரசிகர்கள் இது போன்று இந்திய வீரர்களை மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள பல வீரர்களை சீண்டி உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை அமைதியாக எந்த ஒரு சர்ச்சையும் ஏற்படாத நிலையில் தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மது அருந்த ஆஸ்திரேலியா மைதானங்களில் அனுமதி உண்டு என்பதனால் மதுபோதையில் ரசிகர்கள் இதுபோல குரங்கு என்று அழைத்து அதை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

Siraj 1

இன்றைய போட்டி முடிந்த சிராஜ் இதுகுறித்து நடுவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் நேரடியாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் இதனை கேட்டுக்கொண்ட கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் மைதான நிர்வாகமும் இந்த புகாரை ஏற்று நாங்கள் ரசிகர்களை நெறிமுறை படுத்துகிறோம் என்றும் கூறியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.